Ministry News
இலங்கைக்கான பப்புவா நியூ கினியாவின் உயர்ஸ்தானிகர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
வெளியிடப்பட்ட தேதி

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பப்புவா நியூ கினியா சுயாதீன அரசின் உயர்ஸ்தானிகராக மேதகு வின்சன்ட் சுமாலே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பப்புவா நியூ கினியா சுயாதீன அரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2026, ஏப்ரல் 20 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026, ஏப்ரல் 20





