லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவானது; 33 நாடுகளையும் மூன்று பிரதான உப பிராந்தியங்களான தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபியன் மற்றும் மெக்சிகோ ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த 33 நாடுகளாவன; பிரேஸில், கியூபா, அண்டீகா மற்றும் பார்பூடா, ஆர்ஜண்டீனா, பஹாமாஸ், பெலீஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிக்கா, பொதுநலவாய டொமினிக்கா, டொமினிக்கன் குடியரசு, ஈக்குவடோர், எல் சல்வடோர், கிரெனடா, குவாட்டமாலா, கயானா, ஹெய்ட்டி, ஹொண்டூராஸ், ஜமைக்கா, மெக்ஸிக்கோ, நிக்கராகுவா, பனாமா, பரகுவே, பெரு, சென்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், சென்ட் வின்சென்ட் மற்றும் கிரனடீன்ஸ், சென்ட் லூசியா, சுரினாம், ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, உருகுவெ, வெனிசுவேலா ஆகியனவாகும்.

இலங்கை, இப்பிராந்தியத்தில் இரண்டு வதிவிட தூதரக பணியகங்களைக் கொண்டுள்ளது. பிரேஸிலில் உள்ள இலங்கைத் தூதரகமானது, ஒன்பது (09) லத்தீன் அமெரிக்க நாடுகளான ஆர்ஜண்டீனா, பொலிவியா, சிலி, கொலம்பியா, கயானா, பரகுவே, பெரு, சுரினாம் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கான சமகால அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது. அத்துடன், கியூபாவிலுள்ள இலங்கைத் தூதரகம், ஒன்பது நாடுகளுக்கான சமகால அங்கீகரத்தைக் கொண்டுள்ளது. அந்நாடுகளாவன; பொதுநலவாய டொமினிக்கா, டொமினிக்கன் குடியரசு, எல் சல்வடோர், ஈக்குவடோர், ஹெய்ட்டி, ஹொண்டூராஸ், ஜமைக்கா, பனாமா, வெனிசுவேலா ஆகியனவாகும். வோஷிங்டன் டி.சி இலுள்ள இலங்கைத் தூதரகம்; மெக்சிக்கோ மற்றும் ட்ரினிடாட் மற்றும் டுபாகோ ஆகிய நாடுகளுக்கான சமகால அங்கீகாரத்தையும், நியூயோர்க் இலுள்ள ஐக்கிய நாடுகள் நிரந்த பிரதிநிதி அலுவலகம் பஹாமாஸுக்கான சமகால அங்கீகாரத்தையும் கொண்டுள்ளன.

மேலும், நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் நிரந்தர பிரதிநிதி அலுவலகம் மற்றும் புதுடில்லியிலுள்ள உயர்ஸ்தானிகரகம் ஆகியவை ஊடாக , லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடனான தனது தொடர்புகளை இலங்கை பேணி வருகிறது.

பிரேஸில், கியூபா ஆகிய நாடுகள், இலங்கையிலுள்ள தமது தூதரகங்கள் மூலமாக தங்கள் நலன்களை நிர்வகிக்கின்றன. இப்பிராந்தியத்தின் பிற நாடுகள், புதுடில்லியிலுள்ள தமது தூதரகங்கள் மூலமாகத் தத்தமது நலன்களை நிர்வகிக்கின்றன. வியட்னாமிலுள்ள பனாமா தூதரகமானது, இலங்கைக்கு சமகால அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது.

இராஜதந்திர உறவுகள் : இப்பிராந்தியமானது, இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளுக்கு முக்கியமானதாகும். இங்குள்ள அனைத்து நாடுகளுடனும் இலங்கை நட்பு பூர்வமான உறவுகளைக் கொண்டுள்ளது. சகல முப்பத்து மூன்று (33) நாடுகளுடனும் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்துள்ளது.

கௌரவ துணைத் தூதுவர்கள்: பஹாமாஸ், சிலி, பிரேஸில் (சாஓ போலோ), கொலம்பியா, டொமினிக்கன் குடியரசு, பனாமா மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளுக்கான கௌரவ துணைத் தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நாடுகளின் அமைப்பு: லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்திற்கான முதன்மையான பல்தரப்பு மன்றமாகவுள்ள அமெரிக்க நாடுகளின் அமைப்பானது (OAS); இலங்கையை ஒரு நிரந்தர பார்வையாளராகக் கொண்டு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியம் அல்லது பூமியில் மேற்கு பாகத்திலுள்ள நாடுகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவும், பிராந்தியங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்தவும், பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கவும் ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது. மேலும், மேற்குலகின் அனைத்து நாடுகளிலும் பிரசன்னமாகியுள்ள அமெரிக்க நாடுகளின் அமைப்பின் (OAS) தேசிய அலுவலகங்கள், நிரந்தர பார்வையாளர்கள் தங்கள் தூதரகங்கள் மூலம் உள்நாட்டு மட்டத்தில் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கிறது. தற்சமயம், 34 தனித்தனி நாடுகள் உறுப்பினராகவுள்ள அமெரிக்க நாடுகளின் அமைப்பில் 75 நிரந்தர பார்வையாளர் நாடுகளும் உள்ளன.

பணியாளர் படிநிலை
Staff Members
திரு ரத்னசிங்கம் கோகுலரங்கன்
பணிப்பாளர் நாயகம்
கிளை தொலைபேசி
187
Staff Members
திரு.யூ.அஹமத் ராஸீ
பணிப்பாளர்

மின்னஞ்சல்
ahamed.razee@mfa.gov.lk

தொலைபேசி
+94 112 325 353, +94 112 325 372 /3 /5

கிளை தொலைபேசி
189
Staff Members
திருமதி டிலினி சுவந்தரத்ன
கிளைத் தலைவர்
மின்னஞ்சல்
தொலைபேசி
திருமதி ஜி.ஏ. கல்பனி பிரசங்கிகா
பணிப்பாளர் நாயகத்தின் சிறப்பு தனிப்பட்ட உதவியாளர்
மின்னஞ்சல்
 
தொலைபேசி
கிளை தொலைபேசி
188