2026, பெப்ரவரி 18 எனத் திகதியிட்ட அரச சேவை சுற்றறிக்கை PS/SB/Circular/2/2025-இன் படி, அனைத்து பொது நிறுவனங்களிலும் உள் விவகார அலகொன்று நிறுவப்பட வேண்டும்.
அரச அதிகாரிகளின் நேர்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற ஒரு அரசாங்க சேவையை உருவாக்குவதே இதன் ஒட்டுமொத்த நோக்கமாகும். இது, அரசியலமைப்பின் 156-வது பிரிவின் கீழ், ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கை மற்றும் இலங்கை ஒரு தரப்பாக உள்ள ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான இலங்கையின் கடமைகளுக்கும், அத்துடன் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டம் மற்றும் அது தொடர்பான ஏனைய அரசாங்க முயற்சிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் இசைவானதாகும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் உள்ள உள் விவகாரப் பிரிவானது, 2025 ஏப்ரல் 9 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுவப்பட்டது.
மேற்கண்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இப்பிரிவின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
1. நிறுவனத்தில் ஊழலைத் தடுத்து, நேர்மைப் கலாசாரத்தை வளர்த்தல்.
2. நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்து, நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் அணுகுவதை உறுதிசெய்தல்.
3. நிறுவனத்திற்குள் அறநெறி சார்ந்த நிர்வாகத்தை ஊக்குவித்தல்.
4. முறைகேடுகள் தொடர்பில் புகாரளிப்பதை ஊக்குவிக்கவும், முறைகேடுகளை வெளிப்படுத்துபவர்களைப் பாதுகாக்கவும், இரகசியத்தன்மையைப் பேணவும் ஒரு பாதுகாப்பானதும், அணுகக்கூடியதுமான முறைமையை உருவாக்குதல்.
5. சட்ட அமுலாக்க முகமைகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்துடன் (CIABOC) இணைந்து செயற்படுவதன் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்திவதற்கு ஆதரவளித்தல்.
உள்விவகாரப் அலகின் (IAU) பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள்:
1. நிறுவனத்திற்குள் உள்ள முறைமைசார் தடைகளைக் கண்டறிந்து, செயல்பாட்டு ரீதியிலான பயனுறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்காக அவற்றை எளிமையாக்க, தற்போதைய நடைமுறைகளையும் சுற்றறிக்கைகளையும் ஆராய்தல்.
2. நிறுவனத்தில் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தைக்கு ஆளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, இலக்கு சார்ந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க, ஊழல் இடர் மதிப்பீடுகளை (CRAs) நடத்துதல்.
3. நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும் உக்திகளை கோடிட்டுக் காட்டும் ஒரு நிறுவன நேர்மை செயற்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி அமுல்ப்படுத்துதல்.
4. நிறுவனத்தின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டத்துடன் இணங்கிச் செல்லும்வகையில் சீரமைப்பதன் மூலம், தேசிய ஊழல் எதிர்ப்பு இலக்குகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதி செய்தல்.
5. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் உட்பட, தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுடன் நிறுவனம் இணங்குவதை மதிப்பிடுவதற்கும், மேம்பாட்டிற்கான பகுதிகளைக் கண்டறிவதற்கும் வழக்கமான இணக்க மீளாய்வுகளை நடத்துதல்.
6. அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சொத்து அறிவிப்புத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, CIABOC விதிமுறைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு இணங்க நல முரண்பாடுகளை நிர்வகிக்கவும்.
7. நிறுவனத்தில் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தை தொடர்பான புகார்களைப் பெறுவதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒரு பாதுகாப்பான முறைமையை நிறுவுதல்; அத்தகைய அனைத்துப் புகார்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது பிரிவுகளால் உடனடியாகக் கையாளப்படுவதை உறுதிசெய்தல்; மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தவறாமல் பின்னூட்ட வழங்குதல். தேவைப்பட்டால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக, தொடர்புடைய உண்மைகள், கண்டுபிடிப்புகள் அல்லது தகவல்களை CIABOC-க்கு அனுப்புதல்.
8. நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளை விபரிக்கும் குடிமக்ளுக்கான சாசனமொன்றை உருவாக்கி வெளியிடுதல்.
9. அரசாங்க அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய தரப்படுத்தப்பட்ட நடத்தை விதிகள் உட்பட, நெறிமுறை சார்ந்த நிர்வாகத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை நிறுவி அமுல்ப்படுத்துதல்.
10. ஊழல் எதிர்ப்பு கொள்கைகளுக்கு ஊழியர்களைக் கட்டுப்படுவதனை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளைச் செயற்படுத்துதல்.
11. தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டிற்கான நிறுவனத்தின் மையப் புள்ளியாகச் செயற்படுதல்; CIAВОС மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, நிறுவனம் நேர்மை மதிப்பீட்டு செயன்முறைகளில் பங்கேற்பதையும், அவற்றுடன் இணங்கிச் செயற்படுவதையும் உறுதி செய்தல்.
12. பிரிவின் கடமைகளை நிறைவேற்றுவதில் தொடர்ச்சியான வழிகாட்டுதலையும் ஆதரவையும் பெறுவதற்காக CIABOC உடன் தொடர்பைப் பேணுதல்.
13. உள் விவகார அலகின் (IAU) செயற்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளைச் சுருக்கமாகக் கூறும் காலமுறை மற்றும் ஆண்டு அறிக்கைகளைத் தயாரித்தல்.
14. நேர்மைசார் மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவதற்காக தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
உள்வாரி அலுவல்கள் அலகு
வெளிநாட்டு அலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு,
குடியரசுக் கட்டிடம்,
சர் பாரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01.
தொலைபேசி: +94 11 771 1107
மின்னஞ்சல்: iau@mfa.gov.lk

