Ministry News
சவுதி அரேபியாவில் உள்ள அனோஜன் சிவராசாவின் விவகாரம் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உன்னிப்பான கவனம்
வெளியிடப்பட்ட தேதி

சவுதி அரேபிய இராச்சியத்தில் தற்போது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கை பிரஜையான திரு. அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

 

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவுதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்துடனுமான ஒருங்கிணைப்புடனும், இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

 

இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்தும் இணைப்பில் இருப்பதுடன், திரு. அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 

2026 செப்டம்பர் 18

Show as Media Release on Homepage