Ministry News
'இலங்கையின் பொருளாதாரம் மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு 2026' குறித்த கொழும்பிலுள்ள தூதரகங்களுக்கான விளக்கமளிப்பு நிகழ்வு
வெளியிடப்பட்ட தேதி
img1

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுசிலோன் வர்த்தக சபையுடன் இணைந்துகொழும்பிலுள்ள தூதரகங்களுக்காக, 'இலங்கை பொருளாதாரம் மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு 2026', தொடர்பான விளக்கமளிப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு 2026 ஆகஸ்ட் 20 அன்று லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான நிறுவனத்தில் நடைபெற்றது.

வருகைதந்திருந்தோரை வரவேற்று உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான (இருதரப்பு) பணிப்பாளர் நாயகம்வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான ஒரு மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான அடிப்படைத் தொடர்பை வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தனது உரையில்இலங்கையில் அதிகரித்து வரும் அந்நிய நேரடி முதலீட்டு வாய்ப்புகளையும்வளர்ந்து வரும் சந்தைகளுக்கான அணுகலையும் எடுத்துரைத்தார். உயர் மட்ட பொது-தனியார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன்நிலைபேறான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் தனியார் துறையின் முக்கியப் பங்கையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சிலோன் வர்த்தக சபையின் தலைவர் கிஷான் பாலேந்திராசபையின் வருடாந்த முதன்மை நிகழ்வான இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டின் நோக்கங்களையும் முக்கியத்துவத்தையும் கோடிட்டுக் காட்டினார். அதனைத் தொடர்ந்து, சிலோன் வர்த்தக சபையின் பொதுச் செயலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமானஷிரான் பெர்னாண்டோ, உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள்பதிவு செயன்முறை, மற்றும் வருகை தரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை எடுத்துரைத்துஅது குறித்த விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார்.

இந்த விளக்கவுரையானதுஉச்சிமாநாட்டையும் அதன் முக்கிய நோக்கங்களையும் பற்றிய ஒரு மேலோட்டத்தை தூதரகங்களுக்கு வழங்கியதுடன்இலங்கையில் சர்வதேசப் பங்கேற்பையும் முதலீட்டு வாய்ப்புகளையும் மேம்படுத்துவதில் அவர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டையும் ஆதரவையும் மேலும் ஊக்குவித்தது.

சிலோன் வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு, 2026 அக்டோபர் 12 முதல் 13 வரை கொழும்பு ஷங்ரி-லாவில் நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாடுஇலங்கையில் நிலைபேறான முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதோடு, சர்வதேச கூட்டாண்மைகளையும் தனியார் துறை ஈடுபாட்டையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 

2026 ஆகஸ்ட் 24

img2
Show as Media Release on Homepage