வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அதன் இரண்டாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை மாத்தறையில் திறக்கின்றது

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அதன் இரண்டாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை மாத்தறையில் திறக்கின்றது

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது மக்கள் கொழும்புக்கு பிரயாணத்தை மேற்கொள்ளாத வகையில் அதனது கொன்சியூலர் சேவைகளை அவர்களிடம் கொண்டுசெல்லும் அதனது முன்னெடுப்பின் பகுதியொன்றாக தாபிக்கவுள்ள இரண்டாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தினை வைபவரீதியாக  2019 பெப்ரவரி 15ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, மு.ப 10.30 மணிக்கு மாத்தறையில் திறந்துவைக்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பிரசன்னத்துடன் இந்த அலுவலகத்தை வைபவரீதியாக திறந்து வைப்பர்.

பொது மக்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ள கொன்சியூலர் சேவைகளானது பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள்,  கல்வி  மற்றும் ஏனைய சட்ட ஆவணங்கள் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயன்பாட்டிற்காக  அத்தாட்சிப்படுத்தல், வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கான உதவியை அளித்தல், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான பரிகாரம் மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கைகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மனித சடலங்களை நாட்டிற்கு கொண்டுவரல் போன்ற செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. இந்த பிராந்திய கொன்சியூலர் அலுவலகமானது இல.391, அநகாரிக தர்மபால மாவத்தை, மாத்தறை என்ற முகவரியில் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்தில் பிராந்திய கொன்சியூலர் அலுவலகமொன்று 2017 ஜனவரி 26ஆம் திகதியிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

13 பெப்ரவரி 2019

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close