ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஈரானுக்கான அரசுமுறை விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஈரானுக்கான அரசுமுறை விஜயம்

5 (2)

ஜனாதிபதி ஹஸன் ரௌஹானியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஈரானுக்கான இரண்டு நாள் அரசுமுறை விஜயமொன்றை 2018 மே 12 மற்றும் 13ஆந் திகதிகளில் மேற்கொண்டிருந்ததுடன், குறித்த விஜயமானது தெஹ்ரானிலுள்ள சாதாபாத் மாளிகையில் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதிகளினாலும் தலைமை தாங்கப்பட்ட தூதுக்குழுவினருக்கிடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களையும், ஆயதுல்லா அலி கொமைனி அவர்களுடனான சந்திப்பையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.

பின்வரும் விடயங்களிலான ஒத்துழைப்புக்காக இலங்கை மற்றும் ஈரானுக்கிடையிலான ஐந்து (05) புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடுவதனை குறித்த விஜயம் உள்ளடக்கியிருந்தது:

  • சட்டவிரோதமாக போதை மருந்துகளை கடத்துவதற்கு எதிராக போராடுதல்;
  • சினிமா மற்றும் தொலைக்காட்சி;
  • ஈரானின் தரங்கள் மற்றும் தொழில்துறை ஆய்வு நிறுவகம் மற்றும் இலங்கை தரங்கள் நிறுவகம் ஆகியவற்றுக்கிடையிலான தரப்படுத்தல், அளவியல் மற்றும் பயிற்சி;
  • கலாச்சார, விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு; மற்றும்
  • சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள்.

இரண்டு ஜனாதிபதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் ஆயதுல்லா அலி கொமைனி அவர்களுடனான சந்திப்பு ஆகியவற்றின் போது, பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரங்களை மீண்டும் கொண்டு வரும் வகையில் நவீன அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றை இரண்டு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான பகிரப்பட்ட தொடர்பு வாயிலாக பரிமாற்றிக்கொள்வது தொடர்பிலான அனைத்து விடயங்கள் குறித்தும் பரஸ்பர அக்கறையுடன் கவனம் செலுத்தப்பட்டன. இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான வர்த்தக உறவுகளில் கவனம் செலுத்தும் வகையில், பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் 12ஆவது கூட்டத்தை இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நடாத்துவதற்கு ஜனாதிபதி சிரிசேன அவர்களும், ஜனாதிபதி ரௌஹானி அவர்களும் உடன்பாட்டிற்கு வந்தனர். பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவினை கூட்டுதலானது, சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி மற்றும் நீரியல் வளம், பண்ணை வளர்ப்பு ஆகியன உள்ளடங்கலான துறைகளில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் வியாபார ஒத்துழைப்பினையும், போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீட்டினையும் மேற்கொள்வதற்கான சிறந்த முகாமைத்துவத்திற்கு வழிவகுக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் ஜனாதிபதி சிரிசேன அவர்களின் இந்த அரசுமுறை விஜயத்தின்போது இணைந்திருந்தனர்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2018 மே 16ஆந் திகதி
tampdf
Iran 1
Iran 2
Iran 3
iran5
iran 6
Iran 7
iran 8
iran 9

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close