வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இரு அரசாங்கங்களினதும் அழைப்பின் பேரில், 2026 மே 26 முதல் ஜூன் 3 வரையில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இப்பயணத்தின் போது, அமைச்சர் ஹேரத், நியூசிலாந்தின் அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் அமைச்சர் பெனி வோங் ஆகிய தனது சகாக்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.
மேலும், அவர் சிரேஷ்ட அரசாங்கப் பிரதிநிதிகள், அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் இலங்கை சமூகத்தினரைச் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்திற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாக, வெலிங்டனில் உள்ள இலங்கை உயரஸ்தானிகராலயத்தின் சம்பிரதாயத் திறப்பு விழா அமையவுள்ளது.
இப்பயணம், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுடனான இலங்கையின் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
2026, மே 24

