Ministry News
ஊடக வெளியீடு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடனான (SCO) இலங்கையின் ஈடுபாடு வலுப்பெறுகிறது
வெளியிடப்பட்ட தேதி
img1

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) செயலாளர் நாயகம் நூர்லான் யெர்மெக்பயேவ், 2026 மே 19 முதல் 21 வரை இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (20/05) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் அவருடன் பயனுள்ள கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) செயலாளர் நாயகமொருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணமான இவ்விஜயம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடனான (SCO) இலங்கையின் ஈடுபாட்டை மேலும் உயர்த்துவதற்கு பங்களிக்கும்.

இக்கலந்துரையாடல்கள், குறிப்பாக சுற்றுலா, போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல், மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கும் (SCO) அதன் பங்காளர் நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும், மேலும் ஆழப்படுத்துவதிலும் கவனம் செலுத்தின. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், (SCO) முயற்சிகளில் இணைவதில் இலங்கையின் வலுவான ஆர்வத்தை அமைச்சர் ஹேரத் தெரிவித்ததோடு, இலங்கையை ஒரு ஆற்றல்மிக்க முதலீட்டு மற்றும் சுற்றுலாத் தளமாக மேம்படுத்துவதில் செயலாளர் நாயகத்தின் ஆதரவையும் கோரினார்.

இப்பயணத்தின் போது, ​​செயலாளர் நாயகம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க ஆகியோருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு  

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

 

2026, மே 20

Show as Media Release on Homepage