வெளிநாட்டு நிர்வாகப் பிரிவானது, அரசாங்கக் கொள்கைகள், நிர்வாக ஒழுங்குமுறைகள் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை நோக்கங்களுக்கு இணங்க, 60-க்கும் மேற்பட்ட இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் பணியகங்களின் வினைத்திறனான ஒட்டுமொத்த நிர்வாகம், ஒருங்கிணைப்பு மற்றும் செயற்பாட்டு ரீதியிலான ஆதரவை உறுதிசெய்வதற்குப் பொறுப்பாகும்.
இப்பிரிவானது, ஆட்சேர்ப்பு, நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், பணியாட்தொகுதி முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கை வெளிநாட்டுச் சேவை (SLFS) அதிகாரிகளின் நிர்வாகம் மற்றும் தொழில்சார் முகாமைத்துவம் ஆகியவற்றைக் கையாள்வதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது. மேலும், இப்பிரிவானது, தாய்நாட்டு மற்றும் வதிவிட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் நியமனம் மற்றும் முகாமைத்துவம் உட்பட, வெளிநாட்டுத் தூதரகங்கள் தொடர்பான பணியாளர் தொடர்பிலான விவகாரங்களையும் மேற்பார்வையிடுகிறது.
இலங்கையின் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பணியகங்களுக்குச் சொந்தமான மற்றும் வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் உட்பட, அவற்றின் முகாமைத்துவம், அபிவிருத்தி, புனர்நிர்மாணம், புனரமைப்பு, புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கும் இப்பிரிவு மேலும் பொறுப்பு வகிக்கிறது. அத்துடன், பொது நிதிகளை விவேகமாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், கொள்முதல், மூலதனச் சொத்து முகாமைத்துவம் மற்றும் நிதி இணக்கம் குறித்த வழிகாட்டுதலையும் இபிரிவு வழங்குகிறது.
இப்பிரிவின் கீழ் தொழிற்படும் பயணப் பிரிவானது, அமைச்சின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் தூதரகப் பணியகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான ஏற்பாட்டியல் மற்றும் செயற்பாட்டு ரீதியிலான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கிறது; இதில் விசா வசதி, பயண ஏற்பாடுகள் மற்றும் பயணங்கள் தொடர்பாக வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுடன் தொடர்பு கொள்வது ஆகியவை உள்ளடங்கும்.
மேலும், இப்பிரிவின் தகவல் தொழில்நுட்பம்/ஸைஃபர் பிரிவானது, அமைச்சு, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே ஒரு முக்கியத் தொடர்பு இணைப்பாகச் செயற்பட்டு, பாதுகாப்பானதும், தடையற்றதுமான உத்தியோகப்பூர்வத் தகவல்தொடர்பை உறுதி செய்கிறது.
இப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அஞ்சல் பிரிவானது, சிறப்பு இராஜதந்திரப் பொருட்கள் உட்பட, இராஜதந்திரப் பொதி சேவைகளைக் கையாளுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பொறுப்பாகும்.

