ஐக்கிய அமெரிக்காவிற்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையே கைச்சாத்தாகி, உடனடிப் போர்நிறுத்தத்திற்கு ஏதுவாயமைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை பெரிதும் வரவேற்கிறது.
இப்போர்நிறுத்தம், பதற்றத்தைத் தணிப்பதற்கும், நீண்டகால பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை நோக்கிய குறிப்பிடத்தக்கதொரு படியாகும். இதில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதும், பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சிக்கான கட்டமைப்பொன்றை வழங்குவதும் உள்ளடங்கும். இராஜதந்திரத்தின் மூலம் முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதை இலங்கை வலுவாக ஆதரிப்பதுடன், இந்நடவடிக்கை இப்பிராந்தியம் முழுவதும் நீடித்த அமைதியை வளர்க்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளது.
மத்தியஸ்தர்களாக முக்கியப் பங்காற்றிய பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் கட்டார் அரசுக்கும், இந்த வெற்றிகரமான இராஜதந்திரரீதியிலான தீர்மானத்தினை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்துப் பங்காளிகளுக்கும் இலங்கை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஜூன் 19

