Ministry News
மணிலாவில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தில், பிராந்திய உரையாடல் மற்றும் நடைமுறை ஒத்துழைப்புக்கான தனது ஈடு ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்தும் இலங்கை
வெளியிடப்பட்ட தேதி
img1

கடந்த வாரம் பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தில் (SOM), உரையாடல்நம்பிக்கை கட்டியெழுப்பல்தடுப்பு இராஜதந்திரம் மற்றும் நடைமுறை கூட்டுறவிற்கான ஒரு முக்கிய தளமாக விளங்கும் அதன் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கான தனது ஈடுபாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது.

 

2007-ஆம் ஆண்டு முதல் ஆசியான் பிராந்திய மன்றத்தில் இலங்கையின் தீவிரப் பங்களிப்பை நினைவு கூர்ந்த அதேவேளையில்ஆசியான் துறைசார் உரையாடல் கூட்டாண்மையை முன்னெடுப்பது உட்பட, ஆசியானுடனான தனது ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துவதில் நாட்டின் ஆர்வத்தை இலங்கை தூதுக்குழு மீண்டும் வலியுறுத்தியது.

 

2023-2026 காலகட்டத்தில்ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் குறைப்புபாதுகாப்பு கல்வி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகிய துறைகளில் பல முக்கிய ஆசியான் பிராந்திய மன்றக் (ARF) கூட்டங்களை நடத்துதல் மற்றும் இணைந்து நடத்துதல் உள்ளிட்டவற்றின் மூலம் ஆசியான் பிராந்திய மன்ற (ARF) செயன்முறைக்கு இலங்கை ஆற்றிய தீவிர பங்களிப்பை எடுத்துரைத்த அதேவேளையில், இக்கூட்டத்தில் 2026-2036 ஆம் ஆண்டுக்கான ஆசியான் பிராந்திய மன்ற (ARF) மணிலா செயற்பாட்டுத் திட்டத்தின் உருவாக்கத்தை இலங்கை வரவேற்றது. மேலும்முரண்பாட்டு  முகாமைத்துவம் மற்றும் சமாதானத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் தனது அனுபவத்தின் அடிப்படையில், 2026-2029 ஆம் ஆண்டுக்கான இடைக்கால ஆண்டில் ஆசியான் பிராந்திய மன்ற (ARF) சமாதானப் பாதுகாப்பு நிபுணர்கள் கூட்டத்தை இணைந்து நடத்துவதில் உள்ள தனது ஆர்வத்தையும் இலங்கையின் தூதுக்குழு நினைவுபடுத்தியது.

 

ஆசியான் பிராந்திய மன்ற (ARF) சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்திற்கான தூதுக்குழுவிற்குவெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல தலைமை தாங்கினார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 

2026 ஜூன் 19

Show as Media Release on Homepage