Ministry News
சவூதி அரேபிய இராச்சியத்தில் உள்ள சிவில் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை கண்டனம்
வெளியிடப்பட்ட தேதி
சவூதி அரேபிய இராச்சியத்தில் உள்ள சிவில் விமான நிலையங்களை இலக்கு வைத்து அண்மையில் நடத்தப்பட்டதும், உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தியதுமான தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறது.
சவூதி அரேபிய இராச்சியத்தின் அரசாங்கம் மற்றும் மக்களுடன் இலங்கை தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், பதற்றத்தைத் தணிக்க அனைத்துத் தரப்பினரும் உச்சகட்ட நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் அழைப்பு விடுக்கிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026 அக்டோபர் 09
Show as Media Release on Homepage

