Ministry News
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மற்றும் மூலோபாய கடல்சார் கலந்துரையாடல்களின் வெற்றிகரமாக நிறைவு
வெளியிடப்பட்ட தேதி

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் ஆறாவது சுற்று மற்றும் மூலோபாய கடல்சார் கலந்துரையாடலின் நான்காவது சுற்று ஆகியவை 2026 செப்டம்பர் 21 அன்று கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

 

இக்கூட்டங்களுக்கு அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதல் உதவிச் செயலாளர் சேரா ஸ்டோரி மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் சட்டப் பிரிவுகளுக்கான மேலதிகச் செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.

 

இரு தரப்பினரும் இருதரப்பு அரசியல் விவகாரங்கள், விவசாயம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்ந்ததுடன், பிராந்திய, பல்தரப்பு மற்றும் கடல்சார் விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இணக்கம் கண்டனர்.

 


வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

 

2026 செப்டம்பர் 29

 

Show as Media Release on Homepage