2026 ஜூன் 26 அன்று நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள்சபையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரானஅனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கானகுழு(CEDAW) சமவாயத்தின் அங்கத்துவ நாடுகளின் 24வதுகூட்டத்தின் போது நடத்தப்பட்ட தேர்தலில், இலங்கையின் வேட்பாளரான பேராசிரியர் ரங்கிதா டி சில்வாடி அல்விஸ், பெண்களுக்குஎதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும்ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் குழுவிற்கு (CEDAW) 2027முதல் 2030 வரையிலான இரண்டாவது தொடர்ச்சியானபதவிக்காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநாட்டின்அங்கத்துவ நாடுகள், சமவாயத்தின் குழுவிற்கு 20 வேட்பாளர்களில் இருந்து 12 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தன. தேர்தலில் பங்கேற்ற 187 உறுப்புநாடுகளில், இலங்கை அதிகபட்ச வாக்குகளைப்பெற்று முதலிடம் பெற்றது. அண்டிகுவாமற்றும் பார்புடா, அஜர்பைஜான், கனடா, கியூபா, எகிப்து, எஸ்டோனியா, மெக்சிகோ, மொங்கோலியா, நைஜீரியா, ஸ்பெயின் மற்றும்உகாண்டா ஆகியவை குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டஏனைய உறுப்பினர்களாகும். பேராசிரியர் ரங்கிதா டி சில்வாடி அல்விஸ், CEDAW-இன்இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை வேட்பாளர்ஆவார்.
இலங்கை 1981 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரானஅனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கானஉடன்படிக்கையில் ஓர் உறுப்பு நாடாகஇணைந்தது. CEDAW என்பது, அந்த உடன்படிக்கையின்செயலாக்கத்தைக் கண்காணிக்கும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் உரிமைகள்தொடர்பான 23 வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமானஅமைப்பாகும்.
பேராசிரியர்ரங்கிதா டி சில்வாடி அல்விஸ், 2023-2026 ஆம்ஆண்டுக்கான பன்னிரண்டு வேட்பாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, CEDAW-ன்தற்போதைய உறுப்பினராக உள்ளார். பேராசிரியர் டிசில்வா டி அல்விஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் சர்வதேசவிவகாரங்களுக்கான இணைத் தலைவராகவும், அமெரிக்காவில்உள்ள உலகளாவிய மனித உரிமைகள்நிறுவனத்தின் கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில்தனது இளங்கலை சட்டப் பட்டத்தையும், ஹாவட் சட்டப் பள்ளியில் தனதுமுதுமானி மற்றும் கலாநிதி பட்டங்களையும்பெற்றார். சர்வதேச அளவில் பெண்களின்சம பிரதிநிதித்துவம் மற்றும்உரிமைகளுக்காக வாதிடுவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இவர், சர்வதேசப் பெண்களின் மனித உரிமைகள்மற்றும் CEDAW-ன் அதிகாரவரம்பிற்குற்பட்ட விடயங்களில் ஒரு வல்லுநராக விளங்குகிறார்.
CEDAW தொடங்கப்பட்டதிலிருந்துமூன்று இலங்கை நிபுணர்கள் அதில்பணியாற்றியுள்ளனர். பேராசிரியர் சாவித்ரி குனசேகர 1999-2002 வரையிலும், செல்வி வினிதா ஜெயசிங்க 1982-1986 வரையிலும் CEDAW குழுவில் பணியாற்றியுள்ளனர். பேராசிரியர் ரங்கிதா டி சில்வாடி அல்விஸின் மறுதேர்வு, அவரது நிபுணத்துவம் மற்றும் திறமைக்குக் கிடைத்தமேலதிக ஒரு அங்கீகாரமாகும். மேலும், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமானபாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கையைச் செயற்படுத்துவதிலும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதிலும்பாதுகாப்பதிலும் இலங்கை கொண்டுள்ள வலுவானஅர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.
வெளிநாட்டுஅலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026 ஜூன் 27


