Ministry News
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு நடாத்திய 2026 இற்கான வெசாக் தின நிகழ்வு
வெளியிடப்பட்ட தேதி
img1

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, 2026 மே 27, புதன்கிழமை அன்று, அமைச்சின் வளாகத்தில் அமைச்சக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பங்கேற்புடன் வெசாக் தின நிகழ்வை நடாத்தியது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் பதிற்கடமை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இந்நிகழ்வை  வெகு விமர்சையாகத் தொடங்கி வைத்தார். புத்த பகவானின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பண்டிகையின் உணர்வு மற்றும் விழுமியங்களுக்கு ஏற்ப இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிகழ்வில், வணக்கத்திற்குரிய பேராசிரியர் கலாநிதி இத்ததெமலியே இந்தசார தேரரால் மகா சங்க தர்ம போதனை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புத்த பகவானின் போதனைகளுக்கு மையமான தானம் (கொடுத்தல்), பகிர்வு மற்றும் கருணை ஆகிய உண்மையான உணர்வுகளுடன் ஒரு உணவு தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய நல்லிணக்கம், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மதங்களையும் இன சமூகங்களையும் சேர்ந்த அமைச்சின் பணியாளர்கள் இந்த உணவுத்தான நிகழ்வில் பங்கேற்றனர்.

 

மேலும், புத்த பகவானின் போதனைகளில் போற்றப்படும் உலகளாவிய விழுமியங்களான அமைதி, கருணை மற்றும் ஒற்றுமையின் உணர்வோடு, அமைச்சின் பணியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஒன்றுகூடுவதற்கு வெசாக் தின நிகழ்வானது வாய்ப்பொன்றாக அமைந்தது.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு 01

 

2026, மே 29

Show as Media Release on Homepage