வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 நவம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (2026 நவம்பர் 26) இந்தியாவின் புதுடில்லிக்கு பயணமாகிறார்.
IORA முக்கூட்டமைப்பின் உறுப்பினராகவும், முன்னாள் தலைவராகவும் (2023–2025) உள்ள இலங்கை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் மன்றக் கூட்டத்திற்கு முன்னதாக, IORA இன் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் (CSO) கூட்டம் 2026 நவம்பர் 25 முதல் 26 வரை நடைபெறுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026 நவம்பர் 26

