'க்ளோபல் சுமுட் ப்ஃளொட்டிலா'வின் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை சித்தரிப்பதாகத் தோன்றும், இஸ்ரேலிய அமைச்சர் இத்தாமர் பென்- க்விர் பதிவிட்ட காணொளி குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையையும், மிகுந்த வேதனையையும் வெளிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு உடனடித் தூதரக அணுகலைப் பெறுவதற்கும், அவரது பாதுகாப்பு, நல்வாழ்வு, கண்ணியம் மற்றும் விரைவானதும், பாதுகாப்பானதுமான இலங்கைகுத் திருப்பியனுப்பப்படலுக்கான உத்தரவாதங்களைப் பெறுவதற்கும், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இஸ்ரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கம் முழுமையான உறுதிப்பாட்டுடன் உள்ளது.
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
2026, மே 21

