Ministry News
Media Release
வெளியிடப்பட்ட தேதி
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்களுக்கான உட்கட்டமைப்பின் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கையர் காயமடைந்தமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.
இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலன் ஆகியவையே இலங்கை அரசின் தலையாய முன்னுரிமையாகும்.
அனைத்து தரப்பினரையும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள இலங்கை அரசு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணுவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு தீவிர ஈடுபாட்டுடன் ஆதரவளிக்கிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஜூன் 04
Show as Media Release on Homepage

