புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கயானா கூட்டுறவுக் குடியரசின் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றதும், புதுடில்லியை வதிவிடமாகக்கொண்டதுமான, உயர்ஸ்தானிகராக திரு. தரம்குமார் சீரஜ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கயானா கூட்டுறவுக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2026, ஆகஸ்ட் 25 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஆகஸ்ட் 25





