ஹனோயைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பனாமா குடியரசின் இலங்கை ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றதும், ஹனோயை வதிவிடமாகக்கொண்டதுமான, விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக செல்வி. நுபியெலா யநாறித் அயாலா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பனாமா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2026, ஆகஸ்ட் 25 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஆகஸ்ட் 25





