வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 செப்டம்பர் 2 முதல் 3 வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளம் மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சர் கலாநிதி அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னான் அல் அவார் மற்றும் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மரி உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களை அமைச்சர் ஹேரத் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2 ஆம் திகதி, அமைச்சர் ஹேரத், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் கலாநிதி தானி பின் அகமது அல் ஜயூதியுடன் இணைந்து, துபாயில் நடைபெறும் “Sri Lanka Beyond Your Dreams”, நிகழ்வின் இரண்டாவது பதிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026 செப்டம்பர் 02

