Ministry News
வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கான உத்தியோகபூர்வப் பயணம்
வெளியிடப்பட்ட தேதி

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சர் விஜித ஹேரத்இரு அரசாங்கங்களினதும்  அழைப்பின் பேரில், 2026 மே 26 முதல் ஜூன் 3 வரையில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இப்பயணத்தின் போது​​அமைச்சர் ஹேரத்நியூசிலாந்தின் அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் அமைச்சர் பெனி வோங் ஆகிய தனது சகாக்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில்  ஈடுபடுவார்.

 மேலும்அவர் சிரேஷ்ட அரசாங்கப் பிரதிநிதிகள்அதிகாரிகள்வணிகத் தலைவர்கள்கல்வியாளர்கள்சிந்தனைக் குழுக்கள் மற்றும் இலங்கை சமூகத்தினரைச் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

நியூசிலாந்திற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாகவெலிங்டனில் உள்ள இலங்கை உயரஸ்தானிகராலயத்தின் சம்பிரதாயத் திறப்பு விழா அமையவுள்ளது.

இப்பயணம்நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுடனான இலங்கையின் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும்பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
2026, மே 24

Show as Media Release on Homepage