தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சரின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் 2026 செப்டம்பர் 14 முதல் 16 வரை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, அமைச்சர் ஹேரத், தொழிலாளர் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் தாய்லாந்தின் அலுவல்களுக்கான பதிற்கடமை அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதோடு, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தவுள்ளார்.
தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் (MoA) ஆகியவற்றின் மூலம் இரு தரப்பினரும் தொழிலாளர் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவுள்ளனர்.
சுற்றுலாத்துறை மற்றும் வேலைவாய்ப்பு, புலம்பெயர்வு மற்றும் தொழிலாளர் நடமாட்டம் ஆகியவற்றில் நடைமுறைசார் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கும், மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ரீதியிலான பொருளாதார ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் இவ்விஜயம் வாய்ப்பளிக்கும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
2026 செப்டம்பர் 13

