வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 செப்டம்பர் 27 முதல் 30 வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 81-வது கூட்டத்தொடரில் இலங்கைத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கவுள்ளார்.
'நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமை செய்தல்: அனைவருக்கும் பயனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை' (Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All) என்ற இவ்வாண்டிற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கருப்பொருளுக்கு அமைவாக, 2026 செப்டம்பர் 28 அன்று நடைபெறவுள்ள உயர்மட்ட வாரத்தின், பொது விவாதத்தின்போது, இலங்கையின் தேசிய அறிக்கையை அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பிக்கவுள்ளார்.
பொதுச் சபைக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026 செப்டம்பர் 25

