வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 ஜூலை 23 முதல் 24 வரை பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும் 33வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) அமைச்சர்கள் கூட்டம் மற்றும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (TAC) 50வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
அமைச்சர் ஹேரத் இவ்விரு நிகழ்வுகளிலும் உரையாற்றவுள்ளார்.
இக்கூட்டங்களின் கலந்துகொள்ளும் அதேவேளை, அமைச்சர் பல்வேறு பங்கேற்பு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள், ஆசியான் அமைப்பின் செயலாளர் நாயகம், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சர் பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர், தெரசா பி. லசாரோ உட்பட தனது சக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் பலருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நிகழ்த்தவுள்ளார்.
இப்பயணத்தின் போது, மின்டானோவில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவரின் அலுவலகத்தையும் அமைச்சர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
2026, ஜூலை 22

