Ministry News
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் 2026 அக்டோபர் 26 முதல் 28 வரையில் நடைபெறவுள்ள அங்காராவிற்கான உத்தியோகபூர்வ பயணம்
வெளியிடப்பட்ட தேதி

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, 2026, அக்டோபர் 26 முதல் 28 வரை துருக்கிக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

 

இவ்விஜயத்தின் போது, ​​பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர துருக்கியின் தனது சகாவான பெர்ரிஸ் எகின்சியைச் சந்திக்கவுள்ளார். மேலும், அவர் துருக்கியின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, விவசாயம் மற்றும் வனத்துறை, மற்றும் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளின் பிரதி அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நிகழ்த்தவுள்ளார். அத்துடன், அங்காரா வர்த்தக சபையுடனும் அவர் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.

 

இப்பயணத்தின் போது, ​​இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையே விவசாய ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும், வான்வழிப் போக்குவரத்து ஒப்பந்தத்தைத் திருத்துவதற்கான நெறிமுறை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளன.

 

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு 01

 

2026 அக்டோபர் 26

Show as Media Release on Homepage